FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாஜக மாடல் தவெக அரசு: சீமான்

தில்லியில் செயல்படும் பாஜகவைபோல தவெக அரசு இருப்பதாக சீமான் கூறியது குறித்து...

51 வினாடிகள் முன்பு
சீமான் | முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்பட 12 பேரை தவெக அரசு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "சட்டப் போராட்டத்தில் வெற்றி. பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!

தில்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா, இசை மதிவாணன் உள்ளிட்ட 12 பேரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

இந்தச் சட்டப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து அமைப்புகளின் வழக்கறிஞர்களுக்கும், ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும்" என்று கூறியுள்ளார்.

summary

NTK Leader Seeman alleges that TVK government is acting like the BJP in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments