FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிர்வாகிக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது

சென்னை ராயப்பேட்டையில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிர்வாகி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:02 am IST
பகிர்:

சென்னை ராயப்பேட்டையில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிர்வாகி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (41). இவர் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில், பிரம்மகுமாரிகள் அமைப்பில் யோகா, தியான பயிற்சி பெற்று வந்தார். பின்னர் அவரது நடவடிக்கை சரியாக இல்லாததால், அந்த அமைப்பில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் மணிவண்ணன், வெள்ளிக்கிழமை லாயிட்ஸ் சாலையில் இருக்கும் பிரம்மகுமாரிகள் அமைப்பு அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த நிர்வாகிகளிடம் அவர், மீண்டும் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 
இதுதொடர்பாக அவர்களிடம் மணிவண்ணன் தகராறு செய்தார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மணிவண்ணன், அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்து பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிர்வாகி ரஞ்சனிதேவியை (43) குத்தினார்.
இதில் அவருக்கு தலை, முதுகில் காயம் ஏற்பட்டது. பிற நிர்வாகிகள் மணிவண்ணனை பிடித்து ராயப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 
காயமடைந்த ரஞ்சனிதேவி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மணிவண்ணனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments