கடலூரில் 2 -ஆவது நாளாக மழை
கடலூரில் 2- ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடலூரில் 2- ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த மே 28 -ஆம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் கடலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. உச்சபட்சமாக மே 29-ஆம் தேதி 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் இருந்து வந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை திடீரென மேகங்கள் சூழ்ந்து சிறிது நேரம் மழை பெய்தது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், புதன்கிழமை மாலை கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக, கடலூரில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.