FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கறவை மாடுகள் இனப் பெருக்க மேலாண்மைப் பயிலரங்கம்

கடலூரில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை சார்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் கறவை

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கடலூரில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை சார்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் கறவை மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை குறித்த முதலாம் கட்டப் பயிரலங்கு அண்மையில் நடைபெற்றது.
 பயிலரங்கில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 250 விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆராய்ச்சி மையத் தலைவர் ப.சிலம்பரசன் தொடக்கவுரை ஆற்றினார். மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் (பொ) ஏ.சுமதி தலைமையுரையும், மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் துணை இயக்குநர் பி.ஜெயகுமார் சிறப்புரையும் வழங்கினர்.
 பயிலரங்கில், கறவை மாடுகளுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் காரணிகள், அதற்கான அறிகுறிகள், புதிய மற்றும் நவீன சினைப் பருவ ஒருங்கிணைப்பு முறைகள், அவற்றை பயன்படுத்துவதன் அவசியம், மலட்டுத் தன்மையும் விவசாயிகளின் பொருளாதார தாக்கமும் ஆகிய தலைப்புகளில் துறை வல்லுநர்கள் கருத்துரை வழங்கினர். பயிற்சி நிறைவு விழாவில் கடலூர் மாவட்ட வேளாண்மை துறை உதவி இயக்குநர் சு.பூவராகன் வாழ்த்துரை வழங்கி, பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஆராய்ச்சி மைய பேராசிரியர் பி.முரளி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments