FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

எல்ஐசி முகவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

எல்ஐசி முகவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு தென்மண்டல காப்பீட்டுக் கழக முன்னாள் தலைவரும், விருத்தாசலம் எம்.எல்.ஏ.வுமான வி.டி.கலைச்செல்வன் தலைமை வகித்து, புதிய உறுப்பினர் சேர்க்கை, சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார். தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிறப்புத் தலைவராக ஆர்.கோவிந்தராஜ், செயலராக கருணாநிதி, பொருளாளராக ஜானகிராமன் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். தேர்தல் அதிகாரி மாயக்கண்ணன் தேர்தலை நடத்தினர். சங்க முன்னாள் செயலர் ரமேஷ், வேலூர் கோட்டத் தலைவர் சக்தி, செயலர் பழனி, தென்மண்டலப் பொருளாளர் பழனி, கோட்டப் பொருளாளர் முரளி, சங்க ஆலோசகர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments