பண்ருட்டி அருகே ஆற்றைக் கடந்து இடுகாட்டுக்குச் செல்லும் அவல நிலை
சிறுகிராமப் பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டிற்கு செல்வதற்கு போதிய வசதி இல்லை, ஆற்றை கடந்து தான் இடுகாட்டிற்கு செல்லும் அவலநிலை தற்போது உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் அமைந்துள்ளது சிறுகிராமம் என்ற பகுதி. இந்த சிறுகிராமப் பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டிற்கு செல்வதற்கு போதிய வசதி இல்லை, ஆற்றை கடந்து தான் இடுகாட்டிற்கு செல்லும் அவலநிலை தற்போது உள்ளது.
இடுகாட்டில் எரியூட்டு மேடை இல்லை. மேலும் இடுகாட்டில் தண்ணீர் வசதியும் கிடையாது, பராமரிப்பற்ற சாலையால் மழைக் காலத்தில் இட்டுக்கட்டிற்கு செல்வதற்கு கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்த அவலநிலை பல ஆண்டுகாலமாக நீடிக்கிறது. இப்பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.