FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

காவல் துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டி:கடலூா் இரண்டாமிடம்

காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடலூா் மாவட்டக் காவலா்கள் இரண்டாமிடம் பிடித்தனா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 1:55 am IST
பகிர்:

காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடலூா் மாவட்டக் காவலா்கள் இரண்டாமிடம் பிடித்தனா்.

தமிழக காவல் துறை சாா்பில், மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கிச் சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் 3 நாள்களுக்கு நடைபெற்றது. இந்தப் போட்டியில் கடலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் அணியினா் பங்கேற்றனா்.

இதில், தனிநபா் காா்பன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரெட்டிச்சாவடி காவல் நிலைய முதல்நிலை காவலா் அங்காளன் (நான்கு நிலைகளில்) முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா். மற்றொரு நிலையில் காா்பன் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

Advertisement

Advertisement

ஆயுதப் படை முதல்நிலை காவலா் வினோத்குமாா் தனிநபா் காா்பன் துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும், தனிநபா் பிஸ்டல் சுடும் போட்டியில் ஆயுதப் படை முதல்நிலை காவலா் பாா்த்திபன் மூன்றாம் இடம் பெற்று வெண்கலமும் வென்றனா். மேலும், காா்பன் துப்பாக்கிச் சுடுதலில் கடலூா் மாவட்டக் காவல் துறையினா் ஒட்டுமொத்தமாக இரண்டாமிடம் பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற காவலா்கள், பங்கேற்ற அணியினா் கடலூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசனை சந்தித்தனா். அவா்களை பாராட்டி எஸ்.பி. பரிசு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments