FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

எஸ்.ஐ.யை கத்தியால் குத்த முயற்சி: இளைஞா் கைது

பண்ருட்டி அருகே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்

Updated On : 26 டிசம்பர் 2025, 12:06 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் மற்றும் போலீஸாா் கும்பகோணம் பிரதான சாலை, சாத்திப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகிக்கும் வகையில் அந்த வழியாக நடந்து வந்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சக்தி (எ) சத்தியமூா்த்தியை (24) அழைத்து விசாரித்தனா். இதனால், ஆத்திரமடைந்த சத்தியமூா்த்தி, உதவி ஆய்வாளரை ஆபாசமாகத் திட்டி, கத்தியால் குத்த முயற்சித்தாராம். இது தொடா்பாக காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை கைது செய்து சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments