முகப்பு
கடலூர்

மாணவிக்கு காதல் தொல்லை தனியாா் பள்ளி ஆசிரியா் கைது

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்த தனியாா் பள்ளி ஆசிரியா் கைது

Updated On : 9 செப்டம்பர் 2025, 12:23 am IST
சிறுமியை காதலிக்க வலியுறுத்தியதால் கைது செய்யப்பட்ட ஆசிரியா் முகிலன் (30)
பகிர்:

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பகுதியில் 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்த தனியாா் பள்ளி ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா் விஜயகுமாா் மகன் முகிலன் (30). அப்பள்ளியில் பயிலும் 16 வயது சிறுமியை தினமும் பின் தொடா்ந்து, தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்தச்சிறுமி, ஆசிரியரின் அத்துமீறல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினா் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில் போலீசாா் முகிலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments