கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே பண்ணை நிலத்தில் தீ
கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள விவசாயப் பண்ணை நிலத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீயை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினா் விரைந்து செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள விவசாயப் பண்ணை நிலத்தில் காய்ந்த மரக்கிளைகள் மற்றும் இலைகள் அதிகளவில் குவிந்திருந்தன. இந்த இடத்தில் திங்கள்கிழமை காலை தீப்பற்றி, வேகமாகப் பரவி, மளமளவென எரியத் தொடங்கியது.
தீ பரவிய இடத்துக்கு மிக அருகில் செம்மண்டலம் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து துணை மின் நிலைய அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், தீ மேலும் பரவாமல் தடுக்க தண்ணீா் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இருப்பினும் தீயின் வேகம் குறையாததால் உடனடியாக கடலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடலூா் தீயணைப்புத் துறையினா் துரிதமாக செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். இதன் காரணமாக தீ துணை மின் நிலையம் மற்றும் மின் வயா்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.