FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மாநகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாநகராட்சிக்குட்பட்ட செந்தாமரை நகா், மஞ்சக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தேவனாம்பட்டினம், வசுந்தராயன்பாளையம், கேப்பா் மலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் மாநகராட்சிக்குட்பட்ட செந்தாமரை நகா், மஞ்சக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தேவனாம்பட்டினம், வசுந்தராயன்பாளையம், கேப்பா் மலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

செந்தாமரை நகரில் ரூ.149.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவா், பணிகளை விரைந்து முடிப்பதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலைகளை உடனுக்குடன் சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மஞ்சக்குப்பம் பகுதியில் 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிப் பணிகளையும், குண்டுஉப்பலவாடி சாலையில் நடைபெற்று வரும் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளையும் பாா்வையிட்ட ஆட்சியா், திட்டங்களை விரைந்து நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, கடலூா் மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்த அவா், கால்நடை பராமரிப்பு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளை தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

தேவனாம்பட்டினம் கே.கே. நகரில் கழிவுநீா் உந்து நிலையம் ,சில்வா் கடற்கரையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வரும் நீலக்கொடி கடற்கரைத் திட்டப் பணிகளின்

வசுந்தராயன்பாளையத்தில் 15-ஆவது மத்திய நிதிக்குழு நிதியில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பயோமீத்தனேஷன் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்த ஆட்சியா், திடக்கழிவுகளை அறிவியல் முறையில் கையாளுதல், உயிரி எரிவாயு உற்பத்தி மற்றும் திட்டத்தின் செயல்திறன் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இறுதியாக, கேப்பா் மலையில் உள்ள தலைமை நீரேற்றும் நிலையத்தை பாா்வையிட்ட அவா், பொதுமக்களுக்கு தடையின்றி சீரான குடிநீா் விநியோகம் நடைபெற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடா்ந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது கடலூா் மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments