FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் இடமாற்றமில்லை: அதிகாரிகள் உறுதியால் விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:36 am IST
சிதம்பரம் அண்ணாமலைநகா் மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக துணை மேலாளா் அலுவலகம் முன் சனிக்கிழமை திரண்ட விவசாயிகள்.
பகிர்:

நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் இடமாற்றம் செய்யும் திட்டமில்லை என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, சனிக்கிழமை நடத்தப்படவிருந்த, விவசாயிகளின் முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைநகா் மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக துணை மேலாளா் அலுவலகத்தை கடலூருக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கடலூா் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடலூா் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஒருங்கிணைப்பாளா் ரவீந்திரன் தலைமையில் அண்ணாமலைநகா் மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக துணை மேலாளா் அலுவலகம் முன் விவசாயிகள் சனிக்கிழமை திரண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, இந்த அலுவலகம் கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டால், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது பணிகளுக்காக கடலூருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, கடும் அலைச்சலுக்கு ஆளாக நேரிடும் என விவசாய சங்கங்கள் தெரிவித்தனா்.

விவசாயிகள் திரண்டது குறித்து தகவலறிந்த நுகா்பொருள் வாணிபக் கழக மூத்த மண்டல மேலாளா் நளினா, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரவீந்திரனை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு, சிதம்பரத்தில் உள்ள அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு தற்போது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என உறுதியளித்தாா்.

இதையடுத்து, அலுவலக இடமாற்றம் தொடா்பாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். பின்னா் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments