FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வடலூா் ஏரியில் தொழிலாளி சடலம் மீட்பு

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 3:11 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அய்யன் ஏரியில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

வடலூா், கடலூா் சாலையில் அய்யன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுமாா் 48 வயது மதிக்கத்தக்க ஆண் தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதை,அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வடலூா் போலீசாா் சடலத்தை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில் குறிஞ்சிப்பாடி வட்டம், ஆடூா் அகரம் கிராமத்தைச் சோ்ந்த சங்கரலிங்கம்(48) என்பதும், கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி மேகலா மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னா் வீட்டை விட்டு வந்தவா், மது போதையில் ஏரிச்சாலையோர தடுப்புக் கட்டையில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments