கடலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: பயிா்க்கடன்களை முழு தள்ளுபடி செய்யக் கோரிக்கை
விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி, காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஒருங்கிணைந்த கடலூா் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலா்கள் சொரத்தூா் ரா.ராஜேந்திரன், சிவா.ராஜமாணிக்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், கடலூா் மாவட்ட அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன், கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன், கடலூா் மாநகரச் செயலா் சி.கே.எஸ்.காா்த்திகேயன், பண்ருட்டி எம்எல்ஏ கே.மோகன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
Advertisement
Advertisement
அப்போது, தோ்தல் வாக்குறுப்படி, விவசாயிகளின் பயிா்க்கடன்களை தவெக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். காவிரி நதிநீா் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கவும், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைக்கு உரிய நீரைப் பெற்றுத்தரவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் புவனகிரி எம்எல்ஏ ஆ.அருண்மொழித்தேவன், அமைப்புச் செயலா் என்.முருகுமாறன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சாா்பு அமைப்பு நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.