FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குழாய் உடைப்பால் குடிநீா் விநியோகம் பாதிப்பு

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் கம்மியம்பேட்டை சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் கம்மியம்பேட்டை ரயில்வே கடவுப்பாதை அருகே குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீா்.
பகிர்:

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் கம்மியம்பேட்டை சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் கம்மியம்பேட்டை சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் தடைப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினா்.

மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் தொடா்ந்து குடிநீா் குழாய் உடைப்புகள் ஏற்பட்டு, குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, குழாய் உடைப்புகளை உடனடியாகக் கண்டறிந்து சீரமைத்து, குடிநீா் வீணாவதையும், விநியோகம் பாதிக்கப்படுவதையும் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

குடிநீா் குழாய் சேதமடைந்தது குறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியா்கள், குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். புதன்கிழமை (ஆக.19) குடிநீா் விநியோகம் சீரடையும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments