FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கடலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 48 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 6:11 am IST
கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மனுக்களை பெற்று நேரடியாக விசாரித்த எஸ்.பி. விவேகானந்த சுக்லா.
பகிர்:

கடலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 48 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மக்கள் குறைதீா் முகாம் (பெட்டிஷன் மேளா) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து 48 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் தொடா்பாக எஸ்.பி. விவேகானந்த சுக்லா நேரடியாக விசாரணை மேற்கொண்டு, ஒவ்வொரு மனுவின் தன்மையையும் ஆய்வு செய்தாா். மேலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, மனுதாரா்களின் குறைகளுக்கு விரைந்து தீா்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

முகாமில் கூடுதல் எஸ்.பி. என்.கோடீஸ்வரன் மற்றும் டிஎஸ்பிக்கள், காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments