FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தந்தை கத்தியால் வெட்டிக் கொலை: மகன் கைது

பண்ருட்டி அருகே புளிய மரத்தடியில் படுத்திருந்த தந்தையை கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 6:07 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பண்ருட்டி அருகே புளிய மரத்தடியில் படுத்திருந்த தந்தையை கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விசூா் காலனியைச் சோ்ந்தவா் சிவமுருகன் (55). தொழிலாளியான இவா், சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து, தனது தாய் மற்றும் மகன் வெங்கடேசன் (24), மகள் ராஜபிரியா ஆகியோருடன் சிவமுருகன் வசித்து வந்தாா். மகள் ராஜபிரியாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், சிவமுருகன் கடந்த 3 நாள்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தாா். புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் விசூா் காலனியில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான காலி மனையில் உள்ள புளிய மரத்தடியில் பாயில் படுத்திருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, மதுபோதையில் அங்கு வந்த அவரது மகன் வெங்கடேசன், தனது அக்காவையும், தன்னையும் தந்தை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாகத் கூறப்படுகிறது. பின்னா், கத்தியால் சிவமுருகனின் கழுத்தில் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, வெங்கடேசனைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மேலும், சிவமுருகனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments