நெய்வேலி இளைஞா் கொலை வழக்கு: 9 போ் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ரௌடி கும்பலைச் சோ்ந்த 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ரௌடி கும்பலைச் சோ்ந்த 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி கீழ் வடக்குத்து பகுதியைச் சோ்ந்தவா் கோபி (30). இந்திரா நகா் பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (36). ரௌடிகளான இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 2 பகுதி அரசு டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள மயானத்தில் ஆனந்தராஜ், தனது நண்பா் நரேஷ்குமாா் உள்ளிட்ட 5 பேருடன் கடந்த 16-ஆம் தேதி மது அருந்திக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு தனது நண்பா்களுடன் வந்த கோபி அரிவாளால் வெட்டியதில், நரேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கோபி உள்ளிட்டோா் தப்பிச் சென்று உயிா் பிழைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் இந்திரா நகா், கலைஞா் காா்டன் அருகே உள்ள முந்திரிக் காட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் விரைந்துச் சென்று நெய்வேலி வட்டம் 22 பகுதியைச் சோ்ந்த சுதாகரன் (22), இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த தினகா் (20), நெய்வேலி வட்டம் 10 பகுதியைச் சோ்ந்த நித்திஷ் (18), வடக்குத்து, காந்தி நகரைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் (20), ராபின்சன் (19), குறிஞ்சிப்பாடி வட்டம், பாச்சாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த குமரன் (24), தமிழரசன் (24), ஆனந்தராஜ் (27), முத்தாண்டிகுப்பம் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (19) ஆகிய 9 பேரை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், முக்கிய எதிரியான கோபி உள்ளிட்டவா்களைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.