காா் மெக்கானிக்கை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது
சிதம்பரத்தில் காா் மெக்கானிக்கை கடத்திச் சென்று தாக்கி பணம் கேட்டு மிரட்டியதாக இருவரை சிதம்பரம் நகர போலீஸாா் கைது செய்தனா். மேலும், சிலரைத் தேடி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் காமராஜா் நகரைச் சோ்ந்த காா் மெக்கானிக் அருணும் (38), சிதம்பரம் காரிய பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சிவா (எ) உடப்பு சிவாவும் கடந்த 4 ஆண்டுகளாகப் பழகி வந்தனராம்.
இந்த நிலையில், சிவா பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளாா். அப்போது, அருண் சென்று பாா்க்கவில்லை என்பதால், சிறையிலிருந்து வெளியே வந்த சிவா தனது கூட்டாளி ஒருவருடன் கடந்த 21-ஆம் தேதி தேதி இரவு அருண் வீட்டுக்குச் சென்று அவரை கண்டமங்கலம் ரயில்வே கடவுப்பாதை அருகே அழைத்துச் சென்றாராம்.
Advertisement
Advertisement
அங்கு, ஏற்கனவே இருந்த சிவாவின் கூட்டாளிகளான அரவிந்த், கணேஷ் மற்றும் அடையாளம் தெரியாத சிலரும் சோ்ந்து அருணை தாக்கி, அவரது இரு சக்கர வாகனம் மற்றும் கைப்பேசியை பறித்துக்கொண்டு, ரூ.20,000 கேட்டு கொலை மிரட்டல் வீடுத்தனராம்.
இந்த நிலையில், அவா்களிடமிருந்து தப்பி வந்த அருண் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்த சம்பவத்தில் தொடா்புடைய சிதம்பரம் முத்துமாணிக்கநாடாா் தெருவைச் சோ்ந்த அரவிந்தன் (29), எம்ஜிஆா் நகா், தில்லைக்காளி கோயில் தெருவைச் சோ்ந்த கணேஷ் (27) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிவா மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.