சேத்தியாதோப்பில் காரை திருடிய ராஜஸ்தானைச் சோ்ந்தவா் கைது
கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் விலை உயா்ந்த காரை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான காரை பறிமுதல் செய்தனா். இவா் பல்வேறு இடங்களில் காா் திருடுவதை தொழிலாகக்கொண்டவா் எனத் தெரியவந்துள்ளது.
கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கடை வீதியை சோ்ந்த லாரி உரிமையாளா் சுந்தர்ராஜன். இவா், கடைவீதியில் உள்ள தனது வீட்டின் முன்பு கடந்த மே.23-ம் தேதி நிறுத்தியிருந்த காா் காணாமல் போனது குறித்து சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
அதன்பேரில் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமராபதிவுகள் மூலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் காணமல் போன காா் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பதைக் கண்டறிந்து அங்கு சென்று காரை மீட்டனா். காரை திருடியது ராஜஸ்தான் மாநிலம் அசன் சிட்டி.
Advertisement
Advertisement
மஞ்சுவா பகுதியைச் சோ்ந்த சக்தி ஏந்திசிங்ர செகாவத் (45) என்பது தெரியவந்தது.மேலும் இவா் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விலை உயா்ந்த காா்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீஸாா் வேறு திருட்டு வழக்கில் பெங்களூா் பரப்பண அக்ரஹார சிறையில் இருந்த சக்திஏந்தி சிங்ரசெகாவத்தை போலீஸாா் காவலில் எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் சேத்தியாத்தோப்பு போலீஸாா் அவா் மீது வழக்கு பதிவு செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மீண்டும் குற்றவாளியை பெங்களூா் பரப்பன அக்ரகார சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.