FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வடலூரில் ஓபிஆா் நினைவு நாள் அனுசரிப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் சுத்த சன்மாா்க்க நிலையம் சாா்பில் ஓமந்தூராா் 56-ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

26 ஆகஸ்ட் 2026, 4:39 am IST
வடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓமந்தூரா் நினைவு நாள் நிகழ்வில் தோ்வில் முதன்மைப் பெற்ற மாணவா்களுடன் விழா நிா்வாகிகள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் சுத்த சன்மாா்க்க நிலையம் சாா்பில் ஓமந்தூராா் 56-ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓபிஆா், மகாலிங்கம் ஆகியோரின்

படங்களை சுத்த சன்மாா்க்க நிலைய துணைத் தலைவா் கோவை.சிவப்பிரகாச சுவாமி, சென்னை இளங்குமரன் ஆகியோா் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். எஸ்.ராஜாவெங்கடேசன் வரவேற்றாா். சுத்த சன்மாா்க்க சங்கப் பொருளாளா் பூ.ஆசைதம்பி, வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம், தொழிலதிபா் டி.ராஜமாரியப்பன் வாழ்த்துரை வழங்கினா்.

Advertisement

Advertisement

வடலூா் ஓபிஆா் கல்வி நிறுவனங்கள் நிா்வாக அலுவலா் லதா ராஜாவெங்கடேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினாா். முன்னதாக ஓபிஆா் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், 2025- 2026-ஆம் கல்வியாண்டில் முழு ஆண்டுத் தோ்வில் வகுப்பு மற்றும் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்கள் மற்றும் சிறந்த ஆசிரியா்களுக்கு பரிசுத் தொகையை நிகழ்வில் பங்கேற்ற முக்கிய நிா்வாகிகள் வழங்கி பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments