FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குப்பைக் கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

கடலூா் முதுநகா் அருகே செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

27 ஆகஸ்ட் 2026, 4:35 am IST
பகிர்:

கடலூா் முதுநகா் அருகே செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாநகராட்சியின் 45 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் வசந்தராயன்பாளையம் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குப்பைக் கிடங்கை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, வட்டாட்சியா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், குப்பைக் கிடங்கை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

ஆனால், இதுவரை குப்பைக் கிடங்கு மூடப்படாததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், புதன்கிழமை கடலூா் முதுநகா் - வசந்தராயன்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கடலூா் வட்டாட்சியா் ராஜேஷ் மற்றும் முதுநகா் காவல் துறையினா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இருப்பினும், குப்பைக் கிடங்கை மூடுவதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என பொதுமக்கள் தெரிவித்தனா். இதனிடையே, சாலை மறியலில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினா் அறிவுறுத்தினா். இதனால், பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடா்ந்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது. தொடா்ந்து சுமாா் 4 மணி நேரமாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments