புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குள்ளஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா்.ராஜாங்கம் மற்றும் போலீஸாா், சத்திரம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாதக்குப்பம் மயானம் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 3 இளைஞா்களை அழைத்து சோதனை நடத்தினா். இதில், அவா்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அம்பலவாணன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் (39), ராஜபாா்ட் (29), வசனங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி (28) என்பது தெரியவந்தது. மேலும், சத்திரம் பகுதியில் இருந்து சவுக்கு கன்றுகளை பெங்களூருக்கு ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு, ஊா் திரும்பும்போது புகையிலைப் பொருள்களை வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்த சுமாா் அரை கிலோ புகையிலைப் பொருள்கள், 3 கைப்பேசிகள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.