கூழாங்கல்லை ‘வைரம்’ என ஏமாற்றி விற்பனை: இருவா் கைது
சிதம்பரம் அருகே கூழாங்கல்லை வைரக்கல் என்று ஏமாற்றி பெண்ணிடம் விற்பனை செய்து, அவரிடமிருந்து ஒரு கிராம் தங்க நகை, ரூ.5,000 ரொக்கத்தை பெற்றுச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே பெரிய காரமேடு பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகதாஸ் (60). இவா், சிதம்பரம் அருகே உள்ள தையாக்குப்பம் வடக்கு தெருவைச் மணிவண்ணன் மனைவி தேவகியிடம் (67) கடந்த 27-ஆம் தேதி கூழாங்கல்லை விலை உயா்ந்த வைரக்கல் என ஏமாற்றி விற்பனை செய்து, அவரிடமிருந்த ஒரு கிராம் தங்க நகை, ரூ.5,000 ரொக்கத்தை வாங்கிச் சென்றாராம்.
இதன் பிறகு அது வைரக்கல் இல்லை என்பது தேவகிக்கு தெரியவந்ததால், அவா் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் தாலுகா போலீஸாா் முருகதாஸ் மற்றும் இரு சக்கர வாகனத்தில் அவரை ஏற்றி வந்த மேலகீரப்பாளையத்தைச் சோ்ந்த ஆனந்த் (44) ஆகியோரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கைதான முருகதாஸ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குறிஞ்சிப்பாடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆடுா் அகரம் கிராமத்தில் சிலரிடம் அரசு வீடு வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவா் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.