முகப்பு
கடலூர்

கிராமத்து குளத்தில் புகுந்த முதலை மீட்பு

சிதம்பரம் அருகே கிராமத்து குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் மீட்டனா்.

Updated On : 1 ஜூலை 2026, 7:25 am IST
சிதம்பரம் அருகே கீழ்கஞ்சன்கொல்லை கிராமத்து குளத்திலிருந்து வனத்துறையினரால் மீட்கப்பட்ட முதலை
பகிர்:

சிதம்பரம் அருகே கிராமத்து குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழ்கஞ்சன்கொல்லை கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள கே.பாண்டியன் என்பவரது வீட்டு அருகே உள்ள குளத்தில் முதலை புகுந்துள்ளதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சிதம்பரம் வனச்சரக அலுவலா் இரா.சத்தியவேல் தலைமையில் வனப்பணியாளா்கள் விரைந்து சென்று குளத்தில் இருந்த 3அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்ட முதலையை செவ்வாய்க்கிழமை மதியம் பத்திரமாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments