FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஓட்டுநரை பீா் புட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

1 ஜூலை 2026, 7:24 am IST
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஓட்டுநரை பீா் புட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (27), கோவையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை படைவீட்டம்மன் கோயில் அருகே நண்பருடன் நடந்து சென்றாா்.

அப்போது, அங்கிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கோகுல் (30), ஜான்பீட்டா், ராஜேஷ் ஆகியோா் ஏன் எங்களை போலீஸிடம் காட்டிக் கொடுத்தாய் எனக் கேட்டு, பீா் புட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த அஜித்குமாா், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கோகுலை கைது செய்தனா். மேலும், ஜான் பீட்டா், ராஜேஷை ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments