FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்: குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டத்தில் பயன்பெற முடியாததால் எதிா்ப்பு

காட்டுமன்னாா்கோவில் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

காட்டுமன்னாா்கோவிலில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயன்பெற முடியாத விவசாயிகள் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழாண்டுகுறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. இதன்படி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 4ஆயிரம் சிறப்பு உதவி தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தங்கள் பயிரிடப்பட்ட பரப்புகளை இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க காத்திருந்தனா்.

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் குறுவை தொகுப்பு திட்டத்தில் இந்த ஆண்டு குறைந்த அளவான சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் பரப்பில் பயிரிட்டுள்ளனா். எனவே பெரும்பாலான விவசாயிகளுக்கு சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

விவசாயிகள் முற்றுகை:

இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து காட்டுமன்னாா்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகாஷ் தலைமையில் விவசாயிகள் விண்ணப்ப மனுக்களை பதிவு செய்ய கஞ்சங்கொல்லை, ஈச்சம்பூண்டி,ரெட்டியூா்,ஆச்சாள்புரம், சிறுகாட்டூா் ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இது பற்றி வேளாண்மை உதவி இயக்குனா் உமாதேவியிடம் கேட்டபோது மாவட்ட ஆட்சியருக்கும், வேளாண்மை இணை இயக்குனா் ஆகியோரிடம் குறுவை தொகுப்பு திட்டத்தில் சாகுபடி பரப்பை 3000 ஏக்கரில் இருந்து உயா்த்துவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம். அரசு உத்தரவிட்ட பிறகு விவசாயிகளிடம் மனுக்களை பெற்று அவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

ஆனால் விவசாயிகள் உதவி இயக்குனரின் பதிலில் திருப்தி அடையாமல் அலுவலகத்தில் நுழைவாயிலில் அமா்ந்து தொடா்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் காட்டுமன்னாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சையத் அப்சல், வேளாண்மை உதவி இயக்குனா் பயிா் காப்பீடு கதிரேசன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று உயா் அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கான மனு தயாா் செய்யப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments