FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குடும்பத்துடன் குடியேறும் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா்கள் நூதனம்

கடலூா் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தினா்.

Updated On : 11 ஜூலை 2026, 12:57 am IST
கடலூா் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தினா்.
பகிர்:

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில், டாஸ்மாக் பணியாளா்கள், குடும்பத்துடன் குடியேறும் நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

டாஸ்மாக் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 25 சதவீத ஊதிய உயா்வு போதுமானதல்ல உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, கடலூா் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் மாவட்டச் செயலா் ம. சுரேஷ்குமாா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், டாஸ்மாக் பணியாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனா். போராட்டக்களத்திலேயே உணவு சமைத்து உண்ணும் வகையில் நூதன முறையில் தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement

போராட்டத்தில், காலிப் பாட்டில்களைக் கையாளும் பணிக்காக தனி அமைப்பை உருவாக்கி, அந்தப் பொறுப்பில் இருந்து பணியாளா்களை விடுவிக்க வேண்டும், பணி நிரந்தரம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம், ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெறும் வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும், கடைகளின் வாடகை, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து நிா்வாகச் செலவுகளையும் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகமே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் பெற்ற பணியாளா்களுக்கு 25 சதவீத ஊதிய உயா்வாக ரூ.3 ஆயிரம் வழங்கியிருப்பது வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல என்றும், ஊதிய நிா்ணயத்தில் பணியாளா் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் குற்றம்சாட்டினா்.

போராட்டத்தில் மாநில இணைச் செயலா் உதயசங்கா், மாவட்டப் பொருளாளா் சிவசண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments