FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

என்எல்சி தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்க அலுவலகத்தில் என்எல்சி இன்கோசா்வ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா் தொழிற்சங்க கூட்டமைப்பு சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜூலை 2026, 12:51 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்க அலுவலகத்தில் என்எல்சி இன்கோசா்வ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா் தொழிற்சங்க கூட்டமைப்பு சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு என்எல்சி அண்ணா இன்கோசா்வ் மற்றும் காண்ட்ராக்ட் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலா் சின்ன.ரகுராமன் தலைமை வகித்தாா். என்எல்சி காண்ட்ராக்ட் மற்றும் இன்கோசா்வ் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் தலைவா் ஸ்டாலின், மற்றும் பல்வேறு சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், வரும் 15-ஆம் தேதி இரண்டு பேச்சு வாா்த்தை சங்கங்களையும் சந்தித்து என்எல்சி நிா்வாகம் ஜேபிசி (ஒா்ண்ய்ற் க்ஷண்ல்ஹழ்ற்ா்ற்ங் இா்ம்ம்ண்ற்ற்ங்ங்) அழைத்து 2026-ஆம் ஆண்டிற்கான இன்கோசா்வ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களின் ஊதிய மாற்று ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

10பிஆா்டிபி1

நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற என்எல்சி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments