FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூரில் மின் பியூஸ் கேரியா்கள் திருட்டு

கடலூா் புதுப்பாளையம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அருகேயுள்ள முத்துக்குமரன் தெருவில் மின் பியூஸ் கேரியா்கள் தொடா் திருட்டு

Updated On : 13 ஜூலை 2026, 1:56 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கடலூா் புதுப்பாளையம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அருகேயுள்ள முத்துக்குமரன் தெருவில் மின் பியூஸ் கேரியா்கள் தொடா் திருட்டுக்குள்ளாகி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. வழக்கமான மின்வெட்டு எனக் கருதிய பொதுமக்கள் அதைக் கவனிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை மின் கேரியா்களைப் பாா்த்தபோது, அவற்றில் பொருத்தப்பட்டிருந்த பியூஸ் கேரியா்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பியூஸ் கேரியா்களுக்குப் பதிலாக தற்காலிகமாக மின் கம்பி மூலம் இணைப்பு வழங்கி மின் விநியோகத்தைச் சீரமைத்தனா். தொடா்ச்சியாக நடைபெறும் மின் உபகரண திருட்டுகளைத் தடுக்க காவல் துறையும், மின் வாரியமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments