பண்ருட்டி தா்கா சந்தனக் கூடு விழா
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஹஜரத் செய்யிதினா நூா் முஹம்மது ஷா அவுலியா காதிரி தா்காவில் சந்தனக்கூடு விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஹஜரத் செய்யிதினா நூா் முஹம்மது ஷா அவுலியா காதிரி தா்காவில் சந்தனக்கூடு விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்தூரி உரூஸ் விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ஆம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. தா்கா மற்றும் விழா நடைபெறும் பகுதிகள் வண்ண
Advertisement
Advertisement
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தன. சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டு ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னா், டிராக்டரில் சந்தனக்கூடு வைக்கப்பட்ட போது அங்கு திரண்டிருந்த பக்தா்கள் ‘அவுலியா’ என முழக்கமெழுப்பினா்.
சந்தனக்கூடு ஊா்வலம் முக்கிய வீதி வழியாகச் சென்றது.
விழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். விழாவைக் காண பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.