FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சரக்கு ரயிலில் அடிபட்டு வடலூா் நகராட்சி இளநிலை உதவியாளா் உயிரிழப்பு

வடலூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நகராட்சி இளநிலை உதவியாளா் சரக்கு ரயிலில் அடிபட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 3:07 am IST
பகிர்:

வடலூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நகராட்சி இளநிலை உதவியாளா் சரக்கு ரயிலில் அடிபட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அவுலியா நகா், மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் கா.முகமது ஹனிப் (21). இவா், வடலூா் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

முகமது ஹனிப் புதன்கிழமை காலை 11 மணியளவில் வடலூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு ரயிலில் சிக்கினாா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முகமது ஹனிப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சாா்பு ஆய்வாளா் மோகன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments