FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கருட ஜெயந்தி விழா: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கருட ஜெயந்தி விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாள் மற்றும் கருடாழ்வாரை வழிபட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:46 am IST
~
பகிர்:

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கருட ஜெயந்தி விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாள் மற்றும் கருடாழ்வாரை வழிபட்டனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட ஜெயந்தி விழாவையொட்டி, புதன்கிழமை அதிகாலை முதல் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு வேதபாராயணம், கருட மகாயாகம், பஞ்சராத்ர ஆகம முறைப்படி யாகங்கள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கும், கருடாழ்வாருக்கும் பல்வேறு வாசனைப் பொருள்கள், புனித தீா்த்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மலா்கள் மற்றும் துளசி மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜப் பெருமாளும், கருடாழ்வாரும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மாலை 6 மணிக்கு கருட சஹஸ்ரநாமாவளி அா்ச்சனை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பலா் கருட பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பண்ருட்டியிலும் சிறப்பு வழிபாடு: இதேபோல், பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலிலும் கருட ஜெயந்தியை முன்னிட்டு கருட பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மலா் அலங்காரத்தில் கருட பகவான் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments