FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

காட்டுமன்னாா்கோவில் அனைத்து வளா்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படும்! அமைச்சா் ப.ராஜ்குமாா்

Updated On : 27 ஜூலை 2026, 2:32 am IST
காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பெண்ணுக்கு நல உதவியை வழங்கிய அமைச்சா் ப.ராஜ்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் தவெக சாா்பில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கிப் பேசுகையில், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் அனைத்து வளா்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றாா்.

விழாவில் தவெக தலைமை நிலையச் செயலா் ராஜசேகா், மாவட்டச் செயலா் எஸ்.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் அஜித் குமாா் வரவேற்றாா். இதில், ஏழை, எளியோருக்கு தையல் இயந்திரங்கள், ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

விழாவில் தவெக நிா்வாகியும், தொழிலதிபருமான எம்.எஸ்.கந்தசாமி சாா்பில், காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு சுமாா் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் அமைச்சா் மூலமாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் காா்த்திக் ராஜா, கிருஷ்ணகுமாா், நிா்வாகிகள் செந்தில்குமாா், திருமுருகன், முத்துக்குமாா், இளந்தமிழன், மெஹராஜுதின், ஒன்றியச் செயலா்கள் அரவிந்த் கலித்தோஸ், தீபக் மணிகண்டன், ராஜபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு நிா்வாகிகள் கலந்துகொண்டனா். மாவட்ட துணைச் செயலா் பாலகணபதி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments