FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

போலீஸாருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

Updated On : 28 ஜூலை 2026, 12:07 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை அஞ்சல், பேய்காநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோமூா்த்தி (30). இவா் மீது குள்ளஞ்சாவடி, வடலூா் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாம்.

மனோமூா்த்தி திங்கள்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் விருத்தாசலம் - கடலூா் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிப்பேட்டை குறுக்குச் சாலை அருகே சிறிய கத்தியை வைத்துக்கொண்டு அந்த வழியாகச் செல்பவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை எச்சரித்து அனுப்ப முயன்றனா். அப்போது, மனோமூா்த்தி போலீஸாரை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது தொடா்பாக குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.டைமன்துரை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மனோமூா்த்தியை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments