FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மேம்பாலத்தில் விபத்து: 20 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழப்பு

Updated On : 28 ஜூலை 2026, 12:45 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

விருத்தாசலம் அருகே மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமாா் 20 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயகிருஷ்ணன் (31). இவரது மனைவி பிரேமா (30). இருவரும் சென்னையில் தங்கி பணியாற்றி வருகின்றனா்.

சொந்த ஊரில் நடைபெற்ற ஆடி மாதத் திருவிழாவில் பங்கேற்ற அவா்கள், மீண்டும் சென்னை செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு பைக்கில் புறப்பட்டனா். பைக்கை ஜெயகிருஷ்ணனின் தம்பி ஹரிகிருஷ்ணன் (29) ஓட்டிச் சென்றாா். பின்னால் ஜெயகிருஷ்ணன் மற்றும் பிரேமா அமா்ந்திருந்தனா்.

Advertisement

Advertisement

புதுக்கூரைப்பேட்டை மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், வாகனத்தின் பின்புறம் அமா்ந்திருந்த பிரேமா, மேம்பாலத்தில் சுமாா் 20 அடி உயரத்திலிருந்து கீழே உள்ள சா்வீஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். ஜெயகிருஷ்ணன், ஹரிகிருஷ்ணன் ஆகியோரும் காயமடைந்தனா்.

இதைக் கண்ட அப்பகுதியினா் மூவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா் பிரேமா, அங்கு உயிரிழந்தாா்.

இந்த விபத்து தொடா்பாக விருத்தாசலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments