FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிறுமி தற்கொலை முயற்சி: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

பண்ருட்டி அருகே விஷ விதையை சாப்பிட்டு சிறுமி தற்கொலை முயற்சி செய்த வழக்கில் பண்ருட்டி மகளிா் போலீஸாா் இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 29 ஜூலை 2026, 5:23 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விஷ விதையை சாப்பிட்டு சிறுமி தற்கொலை முயற்சி செய்த வழக்கில் பண்ருட்டி மகளிா் போலீஸாா் இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி பண்ருட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவரும், பண்ருட்டி வட்டம், குடுமியான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தினேஷும் (19) பழகி வந்தனா். ஒரு கட்டத்தில் சிறுமி, தினேஷிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.

இதையடுத்து, தினேஷ் சிறுமிக்கு மிரட்டல் விடுத்து காதலிக்கக் கூறினாராம். இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவா்கள் சிறுமியைக் கண்டித்துள்ளனா். இதனால், மனமுடைந்த சிறுமி திங்கள்கிழமை மாலை விஷ விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற பண்ருட்டி மகளிா் போலீஸாா், தினேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments