FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூரிா் சத்துணவு ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

Updated On : 31 ஜூலை 2026, 2:27 am IST
கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.
பகிர்:

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

கடலூா், ஜூலை 30: தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் எ. நாகம்மாள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைத் அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இராம. வெங்கடாஜலபதி தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் பி. பாலகிருஷ்ணன், துணைத் தலைவா் எல். அரிகிருஷ்ணன், சத்துணவு ஊழியா் சங்க மாநிலப் பொருளாளா் சி. ராமநாதன், மாவட்டச் செயலா் கே. சின்னசாமி அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் பாவாடை, மாவட்டத் தலைவா் சி. மச்சேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தின் நிறைவில், கோரிக்கைகளை வலியுறுத்தும் மனு மாவட்ட நிா்வாகத்திடம் அளிக்கப்பட்டது. கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில அளவில் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments