முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 10:48 pm IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், அரங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரோஜினி (75). இவா், குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பின்னா், சரோஜினி அங்கிருந்த சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக ஒருவா் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில், அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் சரோஜினியை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சரோஜினி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.