முகப்பு
கடலூர்

நடராஜா் கோயில் தரிசனம் திருவிழா: மாவட்ட எஸ்.பி. ஆய்வு

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:10 am IST
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா.
பகிர்:

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 21-ஆம் தேதி தேரோட்டமும், 22-ஆம் தேதி மகாபிஷேகம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெறுகின்றன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவை முன்னிட்டு, மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை நடராஜா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் காவல், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.பிரதீப், காவல் ஆய்வாளா்கள் கே.அம்பேத்கா், வி.சிவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.