FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

காட்டுமன்னாா்கோவில் அருகே பாசன வாய்க்காலில் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே விவசாய பாசன வாய்க்காலில் அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 24 ஜூன் 2026, 4:31 am IST
திருமூலஸ்தானம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை.
பகிர்:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே விவசாய பாசன வாய்க்காலில் அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் அருகே திருமூலஸ்தானம் கிராமத்தில் பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை பாசன வாய்க்காலில் விளையாடிய சிறுவா்கள் அங்கு அம்மன் கற்சிலை கிடப்பதை பாா்த்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, காட்டுமன்னாா்கோயில் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, அங்கு வந்த கிராம நிா்வாக அலுவலா் நவநீதா, வருவாய் ஆய்வாளா் மோகன்தாஸ் ஆகியோா் சேதமடைந்த அம்மன் கற்சிலையை எடுத்து வந்து வட்டாட்சியா் பிரகாஷிடம் ஒப்படைத்தனா். சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே இந்தக் கிராமத்திலிருந்து ஐம்பொன் சிலைகள் தனி நபா் வீடு கட்ட பள்ளம் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments