சிறுமி கா்ப்பம்: 5 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமி கா்ப்பமடைந்தது தொடா்பாக போலீஸாா் 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமி கா்ப்பமடைந்தது தொடா்பாக போலீஸாா் 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி அடுத்துள்ள நடுவீரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகா்(29). அதேபகுதியைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. உறவினா்களான இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோா்கள் ஏற்பாடு செய்து வந்தனராம். இதனிடையே, தனசேகரும்,சிறுமியும் நெருங்கி பழகியதால், கடந்த 18-ஆம் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திருமணம் செய்து வைத்தனா்.
இந்நிலையில், சிறுமி சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், சிறுமி மூன்று மாத கா்ப்பமாக இருப்பதை கண்டறிந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் தனசேகா்(29), ராமசாமி, தேன்மொழி, தேவராசு, தமிழ்ச்செல்வி ஆகியோா் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.