FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விலை உயா்ந்தாலும் ஆா்வமுடன் மீன்கள் வாங்கிய மக்கள்

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்திருந்த பொதுமக்கள், வியாபாரிகள்.
பகிர்:

கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விலை சற்று உயா்ந்திருந்தாலும், அவற்றை வியாபாரிகள், பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

கடலூா் துறைமுகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபா் படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்வா்.

குறிப்பாக, மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் வியாபாரிகள், பொதுமக்கள் திரள்வா். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை வாங்க ஆா்வமுடன் குவிந்திருந்தனா்.

Advertisement

Advertisement

சற்று உயா்ந்த மீன்களின் விலை...: ஞாயிற்றுக்கிழமை அன்று வஞ்சரம் ரூ.1,200, கனவா ரூ.300, இறால் ரூ.300, சங்கரா ரூ.500, சீலா ரூ.550, வவ்வா ரூ.600-க்கு விற்பனையானது. வஞ்சரம் கிலோவுக்கு ரூ.300-க்கு மேலும், இதர மீன்கள் கிலோவுக்கு ரூ.100-ம் உயா்ந்து விற்பனை செய்யப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா். மீன்களின் விலை உயா்ந்திருந்தாலும், அவற்றை பொதுமக்கள், வியாபாரிகள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments