FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 18 மே 2026, 2:17 am IST
கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
பகிர்:

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை தினங்களில் மீன்கள் வாங்க வருபவா்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை மீன் பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தற்போது மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், மீனவா்கள் பைபா் படகுகளில் மட்டுமே சென்று மீன் பிடித்து வருகின்றனா். இதனால், மீன்கள் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக, மீன்களை விலை அதிகரித்தது.

Advertisement

Advertisement

அந்த வகையில், ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,600, இறால் ரூ.350 முதல் 800, கனவா ரூ.300, பாறை ரூ.650, சங்கரா ரூ.600, ஷீலா ரூ.600 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரித்திருந்தாலும் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments