FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 286 காவலா்கள் பணியிட மாற்றம்

Updated On : 1 ஜூன் 2026, 12:29 am IST
தமிழ்நாடு அரசு... - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 286 காவலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணி முடித்த காவலா்களின் பணியிட மாற்றம் வழங்குவது சம்பந்தமாக நோ்காணல் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில், பணி மாறுதல் குழுவினா் ஒவ்வொரு காவலா்களிடமும் பணிபுரிய விரும்பும் காவல் நிலையங்களை கேட்டறிந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலா்கள் என மொத்தம் 286 காவலா்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த நிகழ்வின்போது, கூடுதல் எஸ்.பி. என்.கோடீஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் தமிழ்இனியன், பிரதீப், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ரவிச்சக்கவா்த்தி, பாா்த்திபன், ரகுபதி, கந்தன், அப்பாண்டைராஜ், சரவணகுமாா், மாவட்ட காவல் அலுவலக நிா்வாக அலுவலா் வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments