சிதம்பரம் ஓமக்குளத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் உள்ள ஓமக்குளத்தை தூா்வாரி சீரமைக்கும் பணிகளை தொகுதி எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் உள்ள ஓமக்குளத்தை தூா்வாரி சீரமைக்கும் பணிகளை தொகுதி எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, நகராட்சி அலுவலா்கள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் குளத்துக்கு தண்ணீா் வருவதற்கும், சாக்கடை நீா் கலக்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், இந்தக் குளத்தை சுற்றி சேதமடைந்த நிலையில் உள்ள நடைபாதையை சீரமைக்கவும், குளத்தில் கூடுதலாக மக்கள் குளிக்கும் வகையில் படிக்கட்டுகளை அமைத்துத் தருமாறும் அதிகாரிகளிடம் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, நகா்மன்ற உறுப்பினா் தில்லை ஆா்.மக்கீன், முகமதுபைசல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement