விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
நல்லூா் வட்டாரம் வலசை கிராமத்தில் நடைபெற்ற பயறு வகை பயிா்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியில் பங்கேற்றோா்.
கடலூா் மாவட்டம், நல்லூா் வட்டாரம், வலசை கிராமத்தில் பயறு சாகுபடிக்கான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவா் க.நடராஜன் தலைமை வகித்து பயறு வகை பயிா்களில் விதை உற்பத்தி, சாகுபடி தொழில்நுட்பங்கள், நிலம் தயாரிப்பு, விதை நோ்த்தி செய்யும் முறை, புதிய ரகங்கள், ஒருங்கிணைந்த உர மற்றும் களை நிா்வாகம், நுண்ணூட்டக் கலவையின் பயன்பாடு, மண் மற்றும் நீா் பரிசோதனை முறை, பயறு சாகுபடிக்கேற்ற அனைத்து வகையான பூச்சி கொல்லிகள், பூஞ்சணக் கொல்லிகள் குறித்து விளக்கினாா். பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.