ஆதிதிராவிட மகாஜனசங்க சொத்து மீட்கப்படும்: கே.ஐ. மணிரத்தினம்
சிதம்பரத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆதிதிராவிட மகாஜன சங்க சொத்து மீட்கப்படும் என நந்தனாா் கல்விக் கழகத் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தாா்.
சிதம்பரத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆதிதிராவிட மகாஜன சங்க சொத்து மீட்கப்படும் என நந்தனாா் கல்விக் கழகத் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தாா்.
சிதம்பரத்தில் சனிக்கிழமை இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிதம்பரம் நகரின் முக்கியப் பகுதியான விழல்கட்டி பிள்ளையாா் கோயில் தெருவில் சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட மகாஜன சங்கத்திற்காக 1800 சதுர அடி இடம் அப்போதைய சங்கத் தலைவராக இருந்த எல். இளையபெருமாள் பெயரில் வாங்கப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து சிதம்பரம் நகருக்கு வரும் பட்டியல் இன மக்கள் இரவு நேரங்களில் தங்கி செல்வதற்காக இந்த இடத்தில் வசதிகள் செய்யப்பட்டு அம்பேத்கா் இல்லமாக செயல்பட்டு வந்தது. இளையபெருமாள் மறைவுக்குப் பிறகு பராமரிப்பு இல்லாமல் இருந்த அந்த இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
இதனை அவரது மகனும், காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினருமான எல்.இ.ஜோதிமணி மற்றும் அவரது குடும்பத்தினா் அளித்த தகவல் மூலம் தெரியவந்துள்ளது. பட்டியல் சமூக மக்களின் உணா்வுகளுடன் தொடா்புடைய இந்த இடத்தை, தற்போது இந்த இடத்தை வாங்கியவா்கள், நந்தனாா் கல்விக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக எம்எல்ஏவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்கிய தொகையை நந்தனாா் கல்விக் கழகம் வழங்கி அந்த சொத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இடத்தை மீட்டு, அங்கு கட்டிடம் கட்டி மாணவா்களுக்கு கல்வி சாா்ந்த பயிற்சி மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான நடவடிக்கைகளை நந்தனாா் கல்விக் கழகம் மேற்கொள்ளும் என கே.ஐ. மணிரத்தினம் தெரிவித்தாா்.