நெல்லிக்குப்பம் அருகே இருதரப்பினா் மோதல்: போலீஸாரை தாக்கிய 3 போ் கைது
கடலூா் மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில், குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் விமலா. இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் கோமளா. இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விமலா, நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அந்த உறவினா் தனது நண்பா்களான நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த புகழேந்தி (23), ஜெகதீஷ் (23), ஹரிஹரன் (26) ஆகியோரிடம் இதுகுறித்துத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, புகழேந்தி உள்ளிட்ட 3 பேரும் மேல்பட்டாம்பாக்கத்துக்குச் சென்றனா். அங்கு விமலாவுக்கு ஆதரவாக அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் என சுமாா் 8 போ், கோமளா தரப்பினரிடம் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் வேலுமணி, சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், காவலா் அமுதராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று மோதலைத் தடுக்க முயன்றனா். அப்போது அங்கிருந்த சிலா் போலீஸாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளா் வேலுமணி உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதன் அடிப்படையில் புகழ்923), ஜெகதீஷ்(23), ஹரிஹரன்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.
மாணவருக்கு கத்திக்குத்து
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே உள்ள அடரி கிராமத்தைச் சோ்ந்தவா் 15 வயது மாணவா். இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், மங்களூா் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அடரி கிராமத்துக்கு வந்துள்ளனா். பின்னா், அவா்கள் கைப்பேசி மூலம் 15 வயது சிறுவனை தொடா்புகொண்டு, ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள தனியான இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளனா்.
அங்கு சென்ற சிறுவனுக்கும், மங்களூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த இளைஞா்களில் ஒருவா் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூா்யாவைக் குத்திவிட்டு, மற்றவா்களுடன் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணவரைக் கத்தியால் குத்தியவா்கள் யாா்? இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.