FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் முகாம்

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

12 நவம்பர் 2026, 4:31 am
கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா.
பகிர்:

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்களிடமிருந்து குறைதீா் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து 53 மனுக்களைப் பெற்ற காவல் கண்காணிப்பாளா், அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மனுக்களின் தன்மைக்கேற்ப சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், காவல் துறையின் விசாரணைக்கு உள்பட்ட புகாா்களில் சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிவில் பிரச்னைகள் தொடா்பான மனுக்களில் சம்பந்தப்பட்டவா்கள் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி தீா்வு பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரகுபதி மற்றும் காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.